Friday, July 24, 2015

மகாகவி பாரதியார் - உன் ரசிகையாய்




மௌனமாய் அமர்ந்தபோதும் மனதில் சலனங்கள்

செய்வதறியாது பாரதியை நாடினேன்

அவன் எழுத்துக்களில் என்னை தொலைத்தேன் 

படிக்க படிக்க மனமிறுகிப் போனேன் -

அவனைக் கொண்டாட மறந்தாரே என்று.

அவன்  வாழ்ந்த நிலை வேறு

அவன்  உடல் மண்ணில் வீழ்ந்த பின்னே உயர்ந்த நிலை வேறு !



யாரும் சொல்லஅஞ்சுவதை

சொல்ல முடியா நிலையிலே

திடமாய் கூறிய கவியவன்

சுதந்திரம் பெற எழுதுகோலிலே

வாளை ஏந்திய மாவீரனவன்

புதியதோர் உலகம் படைத்திட

கனவுக்கண்ட கோமகனவன்



உண்ண உணவின்றி வாடியபோதும்

நல்ல விதை விதைத்திட்ட உழவன் அவன்

பெண்ணியம் பேசிய தகப்பன் அவன்

காதலால் ஆதலால் கசிந்தவன் அவன்

பக்தியில் மூழ்கிய முனிவன் அவன்

என்ன தவம் செய்தேனோ

பாரதி நின்னை நான் படிக்க !

இல்வாழ்க்கை !?



வேறொருவர் வாசல் நுழைந்தபோதும்
அவர் குடும்பம் தழைக்க உழைத்தபோதும்
வலிகள் மீறி சிரிப்பை உதிர்த்தபோதும்
சந்தோஷத்தால் வீட்டை நிறைத்தபோதும்
நம்மை அந்நியமாய் மட்டுமே நடத்துவதேனோ !

நம் எண்ணங்களை புரிந்துகொள்ளவும்
நம் கோவங்களை வெளிப்படுத்தவும்
நம் அற்ப சந்தோஷங்களை கொண்டாடவும்
நம் சிறு சிறு விருப்பங்களை நிறைவேற்றவும்
படைக்கப்பட்ட உலகம் இது அல்லவோ ?

தாய் தந்தை உடன்பிறப்பை விட்டு
படி இறங்கி செல்லும்போதே
புது வாழ்வின் கனவுகள் சுமந்து
அடி எடுத்து மனை புகுகையிலே
புலப்படுவதில்லையே  - இல்வாழ்க்கை தன்னை தொலைப்பதே என்று !